Latest News

ஊழலுக்கு முற்றுப்புள்ளி: திராவிட கட்சிகள் மீது பாய்ந்த முதல்வர் விஜய்!

TVK Daily
July 11, 2026 · 1 week ago · 1,130 views
ஊழலுக்கு முற்றுப்புள்ளி: திராவிட கட்சிகள் மீது பாய்ந்த முதல்வர் விஜய்! - Screenshot Capture 2026 07 11 09 59 57

தவெக (TVK) அரசின் 55 நாள் ஆட்சியில் அரசு அலுவலகங்களில் ஊழலை ஒழிக்க முடிந்தது என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார். கரூர் நெரிசல் துயரச் சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக கரூர் சென்ற அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தவெக பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மின்துறையில் முந்தைய அரசு அதிக விலைக்கு வழங்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திமுக ஆட்சியில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். நிர்வாகத்தில் பல தவறுகள் நடந்துள்ளன என்றார். கரூரைச் சேர்ந்த ஒரு முக்கியத் தலைவர் ஊழல் காரணமாகத் தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறினார். வரும் காலங்களில் முந்தைய அரசின் ஊழல்கள் குறித்து மேலும் பல விசாரணைகள் நடைபெறும் என்பதற்கான சமிக்ஞையை அவர் அளித்தார். இதில் இன்னும் எத்தனை முக்கியப் பிரமுகர்கள் சிக்குவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

குற்றங்களில் திராவிடக் கட்சிகள் ஒன்றுதான்

திமுக, அதிமுக மீது விஜய் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். குற்றங்களில் திமுகவும், அதிமுகவும் கூட்டாளிகளாகவே இருப்பதாகவும், அவர்கள் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்ததாகவும் குற்றம் சாட்டினார். திமுக அரசு கருவூலத்தைக் காலியாக்கிவிட்டுச் சென்றுவிட்டது என்றார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரினாலும், சங்கடமான கேள்விகள் எழும்போதெல்லாம் வெளிநடப்பு செய்தது என்று கிண்டலடித்தார். அவர்கள் தன்னை சட்டசபையில் பேசுமாறு கேட்பார்கள், ஆனால் தான் பேசத் தொடங்கியதும் வெளிநடப்பு செய்து விடுவார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார். எதிர்காலத்தில் தனது உரையின்போது சட்டசபைக் கதவுகளை மூட வேண்டிய நிலை வரலாம் என்றும் அவர் கூறினார்.

ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

வில்லிவாக்கம்: முதலமைச்சர் நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். கரூரில் நடைபெறும் மக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றார். கரூர் ஆட்சியர் செய்தியாளர்களுக்கு சிறப்பு அனுமதிச் சீட்டுகளை வழங்கியிருந்த போதிலும், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கரூர் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் நேரடியாக அரங்கத்திற்குள் சென்று அவர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினார்.

மேகதாது விவகாரத்தில் திமுகவின் தோல்வி

திமுக தங்களை சோபா, வாஷிங் மெஷின் கட்சி என்று விமர்சிக்கிறது.. ஆனால் அவர்கள் அரசியல் வியாபாரத்திற்கு ஒரு வெண்டிங் மெஷின் போல் இருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார். ஊழல் பணத்தை கட்சி நிதியாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறினார். மேகதாது விவகாரத்தில் திமுக தோல்வியடைந்துவிட்டதாகவும், உச்ச நீதிமன்றத்திலும் தங்களது வாதங்களை வலுவாக முன்வைப்பதில் பின்தங்கிவிட்டதாகவும் அவர் விளக்கினார். அவர்கள் நினைத்திருந்தால் முன்னேறிச் சென்றிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

லஞ்சம் கொடுக்காதீர்கள்.. நான் இருக்கிறேன்

யாராவது லஞ்சம் கேட்டால், தர மாட்டோம் என்று மக்கள் உறுதியாகச் சொல்ல வேண்டும் என்று விஜய் அழைப்பு விடுத்தார். அப்படிப்பட்டவர்களுக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று அவர் உறுதியளித்தார். தனது ஆட்சியில் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். தங்களுக்கு மக்களின் ஆதரவு இருப்பதாகவும், எம்.எல்.ஏ.க்களுக்காக பேரம் பேச வேண்டிய அவசியமே இல்லை என்றும் கூறினார். வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றார். சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த அதே தீர்ப்புதான் எதிர்கால இடைத்தேர்தல்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் என்று கூறினார். இடைத்தேர்தலில் திமுகவும், அதிமுகவும் தங்கள் பலத்தைக் காட்டிவிட்டு, அதன்பிறகு எங்களை விமர்சிக்கட்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், வெண்ணெய்மலை அருகிலுள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் 5,000 பேர் கலந்து கொண்ட மக்கள் கலந்தாய்வு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று உரையாற்றினார். அதன்பிறகு சிறிது நேரம் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு, ஆட்சியர் அலுவலகம் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மனவாசி பஞ்சாயத்தில் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணி தயாரிப்பு தொழிற்சாலைக்கு (Non-leather footwear manufacturing factory) அடிக்கல் நாட்டினார்.

0 shares
TVK Daily

Related Stories

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா? - jana nayagan e1769112114324
Latest News

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா?

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரிலீசுக்கு முன்பே இந்தத் திரைப்படம்…
July 21, 2026 2,540 4.7
பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி - cm vijay
Latest News

பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ. 4,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டையில் அமைச்சர் ஜே. முகமது பர்வேஸ் இதனைத் தெரிவித்ததுடன், பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ…
July 20, 2026 1,260 0.3
தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து - Screenshot 2026 05 10 013639
Film

தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மத்திய அரசு அறிவித்த 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் 10 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரது படங்கள்…
July 20, 2026 1,743 0.9