சென்னையில் பிஹாரைச் சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக, அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கொலையாளிகள் விசாரணையின் போது அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக வாக்குமூலம் அளித்திருந்தனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த பெண் தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களே இறப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பிஹாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்துள்ளனர்.
