தமிழகத்தில் அரங்கேறும் ‘ஜனநாயகப் படுகொலை’! ஒரு நீதி.. இரு மாநிலமா? தளபதி விஜய்யை ?

சென்னை | மே 9, 2026: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் துரோகம் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 60 ஆண்டுகால திராவிடக் கோட்டைகளைத் தகர்த்து, முதல் தேர்தலிலேயே 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நமது தமிழக வெற்றி கழகத் (TVK) தலைவர் தளபதி விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் மாளிகை காலம் தாழ்த்துவது ஏன்? இது மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களுக்குச் செய்யப்படும் பச்சைத் துரோகம் இல்லையா?

கர்நாடகாவில் ஒரு நியாயம்.. தமிழகத்தில் ஒரு தடையா?

ஆளுநர் அவர்களே, சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தானே? 2018-ல் கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்தபோது, அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லையென்றாலும் “முதலில் பதவி ஏற்பு – பிறகு பலப்பரீட்சை” என்று வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதே சட்டம் தமிழகத்தில் தளபதி விஜய்க்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது? தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை அழைக்க வேண்டியது ஆளுநரின் கடமை இல்லையா?

ஆதரவு குவிந்தும் முட்டுக்கட்டை போடுவது ஏன்?

தளபதி விஜய் அவர்கள் ஏற்கனவே காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) ஆகிய கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுள்ளார். இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) தனது ஆதரவை உறுதி செய்துள்ள நிலையில், தளபதியின் பலம் மேஜிக் பிகரான 118-ஐ எட்டியுள்ளது.

ஆனாலும், ஆளுநர் மாளிகை இன்னும் அமைதி காப்பது ஏன்? “போலி கடிதம்” என்ற ஆதாரமற்ற புகார்களைக் கூறி, பின்னணியில் குதிரைப் பேரத்திற்கு வழிவகை செய்யப்படுகிறதா? மக்களின் தீர்ப்பை விட டெல்லியின் உத்தரவுதான் மேலானதா?

சதியையும் மீறி சரித்திரம் படைப்பார் தளபதி!

விஜய் அண்ணா இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ஒரு தொகுதியை ராஜினாமா செய்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 107 டிவிிகே எம்.எல்.ஏ-க்களும், கூட்டணிக் கட்சிகளும் தளபதியின் பின்னால் உறுதியாக நிற்கின்றன.

  • எதிரிகள் செய்த சூழ்ச்சி: “விஜய் ஒரு நடிகர்தான், அரசியலுக்குத் லாயக்கில்லை” என்று எள்ளி நகையாடியவர்களுக்கு 108 இடங்கள் மூலம் மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்.
  • இன்றைய நிலை: இன்று மாலை 4.30 மணிக்கு தளபதி அவர்கள் மீண்டும் ஆளுநரைச் சந்தித்து 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை வழங்க உள்ளார்.

தமிழகமே தயாராக இரு!

தர்மம் வெல்லும், தளபதி விஜய் கோட்டையை ஆளுவார்! ஆளுநர் மாளிகை இனியும் தாமதித்தால், தமிழகத்தின் ஒவ்வொரு தெருவும் போர்க்களமாகும். இது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டம் அல்ல, தமிழக மக்களின் ‘தன்மானப் போராட்டம்’.

தளபதி விஜய் வருவார்.. தமிழகத்தை ஆளுவார்!


#JusticeForTVK #VijayForCM #TNElectionThriller2026 #StruggleForDemocracy

Scroll to Top