Latest News

தமிழக முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: குவியும் பிரபலங்களின் வாழ்த்து மழை!

TVK Daily
June 22, 2026 · 4 weeks ago · 742 views
தமிழக முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: குவியும் பிரபலங்களின் வாழ்த்து மழை! - Screenshot 20260512 193946 Chrome

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கி, முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்று, தற்போது தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே சிவகாசியில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய தலைவர்களின் வாழ்த்துகள் இதோ:

பிரதமர் மோடி: “தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”

​காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: “விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தமிழக மக்களின் உரிமைகள், கௌரவம் மற்றும் அபிலாஷைகளைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவதிலும் நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.”

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்: “விஜய்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுகிறேன். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற்று, மக்கள் சேவையைத் தொடர்ந்து ஆற்றிட வாழ்த்துகள்.”

​தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின்: “விஜய், நீங்கள் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கவும், மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்யத் தேவையான வலிமையைப் பெறவும் வாழ்த்துகள். பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.”

நடிகர் கமல் ஹாசன்: “கோடிக்கணக்கான மக்களின் அன்பைப் பெற்ற தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.”

நடிகை நயன்தாரா: “பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் சார். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு அற்புதமாக அமையட்டும்.”

நடிகை குஷ்பூ: “எனது சகோதரரும், தமிழக முதல்வருமான விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.”

0 shares
TVK Daily

Related Stories

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா? - jana nayagan e1769112114324
Latest News

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா?

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரிலீசுக்கு முன்பே இந்தத் திரைப்படம்…
July 21, 2026 2,540 3.3
பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி - cm vijay
Latest News

பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ. 4,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டையில் அமைச்சர் ஜே. முகமது பர்வேஸ் இதனைத் தெரிவித்ததுடன், பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ…
July 20, 2026 1,278 0.3
தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து - Screenshot 2026 05 10 013639
Film

தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மத்திய அரசு அறிவித்த 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் 10 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரது படங்கள்…
July 20, 2026 1,743 0.6