டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் தளபதி விஜய் அதிரடியான மற்றும் தீர்க்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முழு அதிகாரத்தையும் மாநில அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலுவாக வலியுறுத்தியுள்ளார்.
தற்போது கல்வி பொதுப்பட்டியலில் (Concurrent List) உள்ளதால், மத்திய-மாநில அரசுகள் இரண்டுமே சட்டம் இயற்றலாம். ஆனால், கல்வி உரிமைகளை முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு (State List) மாற்ற வேண்டும் என்பதே தவெக-வின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இதற்கு ஏதேனும் அரசியலமைப்புச் சட்டத் தடைகள் இருந்தால், இடைக்காலத் தீர்வாக மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சிறப்பு வழிமுறையைக் கொண்டு வர வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூர் தேவைகள் மற்றும் மாணவர்களின் நலனுக்கு ஏற்ப மாநிலங்களே முடிவெடுப்பதே சிறந்தது என்ற அவரது கருத்து மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மத்திய அரசுக்கு சாட்டையடி.. திமுக-வின் போலி வாக்குறுதிகளுக்கு முற்றுப்புள்ளி!
தளபதி விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பதன் மூலம் மத்திய அரசைச் சாடிய விஜய், அதே நேரத்தில் தமிழகத்தை ஆளும் திமுக-வின் இரட்டை வேடத்தையும் மிகச் சரியாக அம்பலப்படுத்தியுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்” என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதை தவெக சுட்டிக்காட்டியுள்ளது.
நாங்களே நீட்டை ரத்து செய்வோம் என்று கூறி மக்களை ஏமாற்றும் அரசியலை நாங்கள் செய்ய மாட்டோம்” என்று திமுக-வை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் விஜய். ஒரே அம்பில் மத்திய அரசின் கொள்கையையும், திமுக-வின் போலி வாக்குறுதிகளையும் வீழ்த்தும் விஜய்யின் இந்த ராஜதந்திரம் அரசியல் வட்டாரங்களில் ‘மாஸ்’ மூவாக பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் நலனே முக்கியம் – தவெக-வின் மக்கள் நலம் சார்ந்த அரசியல்:
தமிழகத்தில் நீட் தேர்வு என்பது வெறும் தேர்வு மட்டுமல்ல, அது மாணவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. ஏழை, எளிய மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும், பயிற்சி மையங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க முடியாத மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படுகிறது என்பதும் நீண்டகாலக் குற்றச்சாட்டு. தற்போது நடந்துள்ள வினாத்தாள் கசிவு விவகாரம், நீட் தேர்வின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தச் சூழலில், மாணவர்களின் உண்மையான குரலாக தவெக ஒலித்துள்ளது.
