இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால், சுமார் ரூ. 50 கோடி தருவதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் என்னிடம் கூறினர். இதற்கு நான் சம்மதிக்கவில்லை என்றால், எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வோம் என்று அவர்கள் என்னை மிரட்டினர்.”

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நான் பெற்ற வெற்றியை ஜீரணிக்க முடியாமல், அரசியல் பழிவாங்கும் நோக்கில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தன்னிடம் பேரம் பேசியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.