தமிழக அரசியலின் ‘டேவிட்’ விஜய்: கோலியாத்துகளை வீழ்த்தியும் குறையும் மெஜாரிட்டி.. தளபதியின் ‘முள் பாதை’ பயணம்!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த பல தசாப்தங்களாக திமு‌க, அஇதிமுக என இரண்டு துருவங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த அதிகார மையத்தை, தனது ஒற்றை வருகையால் திசைமாற்றிப் போட்டுள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.

கொண்ட மு.க. ஸ்டாலின், மற்றொருவர் அனுபவம் மிக்க எடப்பாடி பழனிசாமி. இவர்களின் பணபலம், படைபலம் மற்றும் 60 ஆண்டுகால திராவிட அரசியல் அடித்தளத்தை ஒற்றை ஆளாகத் தகர்த்து எறிந்துள்ளார் விஜய்.

ஆனால், போர் முடிந்துவிட்டது என்று நினைத்தால் அதுதான் இல்லை; உண்மையான சவாலே இப்போதுதான் தொடங்குகிறது!

எண்களின் விளையாட்டு: கத்தி மேல் நடக்கும் விஜய்
ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் நம்பர் 118. ஆனால் விஜய்யின் டிவிK வசம் இருப்பது 108 இடங்கள் மட்டுமே. இதில் விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றுள்ளதால் ஒன்றை விட வேண்டும், சபாநாயகர் ஓட்டு எனப் பல கணக்குகளைப் பார்த்தால், பலம் 106 ஆகக் குறையும்.

கூடுதல் 12 இடங்களுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் விசிக போன்ற கட்சிகளின் தயவு விஜய்க்குத் தேவைப்படுகிறது. 2006-ல் வெறும் 96 இடங்களை வைத்துக்கொண்டு கருணாநிதி அவர்கள் எப்படிச் சாமர்த்தியமாக ஆட்சி நடத்தினாரோ, அதே போன்ற ஒரு ‘அக்னி பரீட்சை’ இப்போது விஜய்க்கு காத்துக்கொண்டிருக்கிறது.

வாக்குறுதிகளும்… வராத நிதியும்!
கூட்டணி கட்சிகளின் ‘கொந்தளிப்பான’ கோரிக்கைகளைச் சமாளிப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் தான் கொடுத்த மெகா வாக்குறுதிகள் விஜய்யை யோசிக்க வைக்கின்றன.

திருமணப் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுச் சேலை.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500.

பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.

ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள்.

பத்து லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகப் பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு, இந்த ‘இலட்சம் கோடி’ மதிப்பிலான திட்டங்களை விஜய் எப்படிச் செயல்படுத்தப் போகிறார்? மத்திய அரசு இதற்கு ஒத்துழைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அஇதிமுக-வில் இருந்து வரும் ‘ஆஃபர்’?
இக்கட்டான இந்தச் சூழலில், விஜய்க்கு ஒரு ‘புதையல்’ கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அஇதிமுக-வின் ஒரு பலமான கோஷ்டி, விஜய்க்கு ஆதரவு அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: இதன் மூலம் ஸ்டாலினை ஓரங்கட்டலாம், அதே சமயம் ஜெயலலிதா மறைவுக்குப் பின் பலவீனமாக இருக்கும் அஇதிமுக-வுக்கு விஜய்யின் ‘கிரேஸ்’ மூலம் புத்துயிர் ஊட்டலாம் என்பதே அவர்களின் திட்டம்.

எடப்பாடி பழனிசாமி இதற்குப் பச்சைக்கொடி காட்டினால், விஜய் எளிதாகப் பெரும்பான்மையை நிரூபித்து விடுவார். இல்லையெனில், தமிழக அரசியலில் ‘தளபதி’யின் பயணம் மிகக் கடினமான முள் பாதையாகவே இருக்கும்!

வெற்றிப் படிகளில் ஏறிவிட்ட விஜய்யின் ‘அரசியல் சிம்மாசனம்’ அமையப்போவது பூக்களாலா? அல்லது முட்களாலா? பொறுத்திருந்து பார்ப்போம்!