மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: டி.எம்.சி. அரசு மீது ராஜ்நாத் சிங் கடும் தாக்குதல்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) அரசு சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தை சட்டவிரோத ஆட்சிக்குள் தள்ளிவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். சந்தேஷ்காளி போன்ற சம்பவங்கள் உலக அளவில் மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாகவும், குண்டர்கள் ராஜ்ஜியம் நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
