நடிகர் விஜய் கோரிக்கை தள்ளுபடி: ரூ.1.5 கோடி வருமான வரி அபராதம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ‘புலி’ திரைப்பட வருமானம் தொடர்பான ரூ.1.5 கோடி வருமான வரி அபராதம் செல்லும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.