மே 1, 2: சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரிக்கு மிக கனமழை எச்சரிக்கை!

மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏப்ரல் 30 முதல் மே 2 வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
