District News

“சபாநாயகர் நாற்காலி அவ்வளவு ஆபத்தானதா?” – சட்டசபையில் முதல்வர் விஜய் சொன்ன ‘குபீர்’ சிரிப்பு கதை!

TVK Daily
May 12, 2026 · 2 months ago · 100 views
"சபாநாயகர் நாற்காலி அவ்வளவு ஆபத்தானதா?" - சட்டசபையில் முதல்வர் விஜய் சொன்ன 'குபீர்' சிரிப்பு கதை! - Screenshot 20260512 193946 Chrome

சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் ஆற்றிய முதல் உரையே தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. சபாநாயகர் பதவி என்பது எவ்வளவு சவாலானது என்பதை ஒரு சுவாரஸ்யமான வரலாற்று கதையின் மூலம் அவர் விளக்கிய விதம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

சம்பவம் என்ன?சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகர், தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மரபுப்படி, அவரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார்.

இந்த நிகழ்வின் போது பேசிய முதல்வர் விஜய், சபாநாயகரை ஏன் கையைப் பிடித்து இழுத்துச் சென்று அமர வைக்கிறார்கள் என்பதன் பின்னணியில் உள்ள ஒரு வரலாற்று ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்.விஜய் சொன்ன அந்த கதை:”இந்திய நாடாளுமன்ற மரபுகள் பலவும் பிரிட்டனிடம் இருந்தே எடுக்கப்பட்டவை.

ஆரம்பகாலத்தில் பிரிட்டனில் சபாநாயகர் பதவி என்பது மிகவும் ‘ஆபத்தான’ ஒன்றாகக் கருதப்பட்டது.

ஏனென்றால், நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுகளை மன்னரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பு.ஒருவேளை மன்னரின் கோரிக்கையை நாடாளுமன்றம் நிராகரித்தாலோ அல்லது மன்னருக்கு பிடிக்காத செய்தியை சபாநாயகர் சொன்னாலோ, ஆத்திரமடையும் மன்னர் சபாநாயகருக்கு மரண தண்டனை கூட விதிப்பாராம். இதனால் அந்தப் பதவிக்கு வர யாருமே முன்வர மாட்டார்கள்.

இதன் காரணமாகவே, தேர்ந்தெடுக்கப்படுபவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அந்த நாற்காலியில் அமர வைக்கும் பழக்கம் உருவானது.

அந்த மரபுதான் இன்றும் தொடர்கிறது” என்று கலகலப்பாகப் பேசி அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தினார்.

சபாநாயகர் பதவி என்பது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகుபாடு பார்க்காமல் நடுநிலையாக செயல்பட வேண்டிய ஒன்று என்பதை இவ்வளவு நகைச்சுவையாகவும், ஆழமாகவும் முதல்வர் விஜய் விளக்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.தற்போது இந்த வீடியோ மற்றும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

0 shares
TVK Daily

Related Stories

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா? - jana nayagan e1769112114324
Latest News

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா?

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரிலீசுக்கு முன்பே இந்தத் திரைப்படம்…
July 21, 2026 2,540 4.2
பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி - cm vijay
Latest News

பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ. 4,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டையில் அமைச்சர் ஜே. முகமது பர்வேஸ் இதனைத் தெரிவித்ததுடன், பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ…
July 20, 2026 1,260 0.3
தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து - Screenshot 2026 05 10 013639
Film

தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மத்திய அரசு அறிவித்த 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் 10 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரது படங்கள்…
July 20, 2026 1,743 0.8