Political

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்: பாஜக தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

tvkteam1
February 1, 2026 · 6 months ago · 449 views

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக சார்பில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ள தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முக்கிய தலைவர்களுக்கு தொகுதிகளின் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், உதகை, திருப்பூர் வடக்கு, வால்பாறை உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும், தமிழிசை சௌந்தரராஜன் கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் பொறுப்பேற்றுள்ளனர்.

அதேபோல், பொன்.ராதாகிருஷ்ணன் தென்காசி, பரமக்குடி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கும், வானதி சீனிவாசன் திருப்பூர் தெற்கு, குன்னூர், கோவை தெற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கான முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

0 shares
tvkteam1

Related Stories

ரூ. 50 கோடி தர்றோம், பதவியை ராஜினாமா செய்!" - திமுக பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் MLA ஆடியோ வெளியிட்டு பரபரப்பு! - Screenshot Capture 2026 07 07 10 06 28
Main News

ரூ. 50 கோடி தர்றோம், பதவியை ராஜினாமா செய்!” – திமுக பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் MLA ஆடியோ வெளியிட்டு பரபரப்பு!

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால், சுமார் ரூ. 50 கோடி தருவதாக முன்னாள் அமைச்சர் அனிதா…
July 7, 2026 500
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் குடும்பத்தினர் மீது பண மோசடி புகார்: பெண் மருத்துவர் போலீசில் தஞ்சம் - download
Latest News

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் குடும்பத்தினர் மீது பண மோசடி புகார்: பெண் மருத்துவர் போலீசில் தஞ்சம்

நம்பிக்கை துரோகம் செய்ததாக மருத்துவர் குற்றச்சாட்டுசென்னை:திமுக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவாவின் குடும்பத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மூத்த மகள்…
July 2, 2026 2,198
தீவிரவாதிகளை வீழ்த்திய வீரத்தமிழன்: கீர்த்தி சக்ரா விருது பெற்ற லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம்! - Screenshot 20260628 105325 Chrome
District News

தீவிரவாதிகளை வீழ்த்திய வீரத்தமிழன்: கீர்த்தி சக்ரா விருது பெற்ற லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம்!

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த கடும் மோதலில் படுகாயமடைந்து, மீண்டு வந்து வீரதீரச் செயலை ஆற்றிய இந்திய ராணுவ வீரர் ஏ. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு, மத்திய அரசு…
June 28, 2026 1,383