Highlights
- தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, எம்-சாண்ட் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- விதிகளை மீறி கனிம வளங்களை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுரங்கத்துறை எச்சரித்துள்ளது.
- புதுச்சேரி, காரைக்கால் தவிர மற்ற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
- எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்காலிக தடை உத்தரவு
கட்டிட கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஜல்லி, எம்-சாண்ட் போன்ற கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புவியியல் மற்றும் சுரங்கத்துறை எச்சரித்துள்ளது.
இதற்காக, தமிழ்நாடு கனிமங்கள் (சட்டவிரோத அகழ்வு, கடத்தல் மற்றும் சேமிப்பு தடுப்பு) விதிகள்-2011-ல் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்வதை கட்டுப்படுத்தும் அதிகாரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு ஜல்லி, எம்-சாண்ட் மற்றும்
