சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அநீதி இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 7 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்று, 108 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி, தனிப்பெரும் கட்சியாக (Single Largest Party) உருவெடுத்துள்ள நமது தமிழக வெற்றி கழகத்தை (TVK) ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மற்ற மாநிலங்களில் ஒரு நியாயம்.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தத் தடை?

ஆளுநர் அவர்களே, அரசியலமைப்புச் சட்டம் என்பது இந்தியா முழுவதும் ஒன்றுதான். ஆனால் மற்ற மாநிலங்களில் நீங்கள் நடந்துகொண்ட விதத்திற்கும், இப்போது தமிழகத்தில் தளபதி விஜய்க்கு எதிராக நீங்கள் போடும் முட்டுக்கட்டைக்கும் என்ன சம்பந்தம்?

தளபதியின் எழுச்சியைக் கண்டு பயப்படுகிறதா டெல்லி?

ஊழல் அரசியல்வாதிகளை ஓரம் கட்டிவிட்டு, ஒரு சாமானியனாக, மக்களுக்காகக் கட்சி தொடங்கி, முதல் தேர்தலிலேயே 108 கோட்டைகளைப் பிடித்த தளபதி விஜய்யின் வளர்ச்சியைப் பார்த்து பழைய அரசியல் சக்திகள் நடுங்குகின்றன. அவர்களின் கைக்கூலியாக ஆளுநர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் ஒவ்வொரு தொண்டனுக்கும் எழுகிறது.

“ஆதரவு கடிதம் கொடு”, “பெரும்பான்மையை நிரூபி” என்று நிபந்தனைகள் விதிக்கும் ஆளுநர் அவர்களே, கர்நாடகாவில் எடியூரப்பாவிடம் கேட்காத கேள்வி, இங்கு விஜய்யிடம் மட்டும் ஏன்?

தமிழகம் அடிபணியாது!

தளபதி அவர்கள் ஏற்கனவே காங்கிரஸின் ஆதரவைப் பெற்று 113 என்ற பலத்துடன் நிற்கிறார். இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், அவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் குதிரைப் பேரத்திற்கு ஆளுநரே வழிவகுத்துக் கொடுக்கிறாரா?

இது வெறும் கட்சியின் போராட்டமல்ல, தமிழக மக்களின் தீர்ப்புக்கான போராட்டம். ஜனநாயகத்தை மதிக்காமல், ஆளுநர் மாளிகையை வைத்து அரசியல் விளையாடினால், தமிழகத்தின் ஒவ்வொரு தெருவிலும் டிவிிகே தம்பிகள் அறப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

எங்கள் தளபதி வருவார்.. தமிழகத்தை ஆளுவார்!


#tvkdaily.com #tvkdaily #JusticeForTVK #VijayForCM #TNElections2026 #GovernorDoubleStandard