Crime

தவெக அரசைக் கவிழ்க்க சதி: மருத்துவர் உள்பட இருவர் கைது – ரூ. 40 லட்சம் பறிமுதல்!

TVK Daily
July 11, 2026 · 1 week ago · 883 views
தவெக அரசைக் கவிழ்க்க சதி: மருத்துவர் உள்பட இருவர் கைது - ரூ. 40 லட்சம் பறிமுதல்! - tvk logo

தவெக (TVK) ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்த வழக்கில் மருத்துவர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தவெக அரசைக் கவிழ்க்க சதி செய்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பின்னணியில், நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேதுராஜ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் பெங்களூருவில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதேபோன்று, நாமக்கல்லில் மற்றொரு மருத்துவர் உள்பட இருவரை சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) போலீஸார் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்து வருவதாக வியாழக்கிழமை இரவு காவல் துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: #தவெக #TVK #TVKGovernment #சதி_வழக்கு #கைது #TamilNaduNews #TNPolitics #ChennaiPolice #Namakkal #Bengaluru #Arrest

0 shares
TVK Daily

Related Stories

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா? - jana nayagan e1769112114324
Latest News

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா?

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரிலீசுக்கு முன்பே இந்தத் திரைப்படம்…
July 21, 2026 2,540 5.9
பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி - cm vijay
Latest News

பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ. 4,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டையில் அமைச்சர் ஜே. முகமது பர்வேஸ் இதனைத் தெரிவித்ததுடன், பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ…
July 20, 2026 1,260 0.4
தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து - Screenshot 2026 05 10 013639
Film

தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மத்திய அரசு அறிவித்த 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் 10 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரது படங்கள்…
July 20, 2026 1,743 1.2